“வேதாளம்” மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் என்ன படம் யாரு இயக்குனர் எப்போ படபிடிப்பு இந்த வருடம் படம் இருக்க இப்படி பல கேள்விகளுக்கு இதோ பதில் .
தல அஜித்திற்கு சமீபத்தில் காலில் ஆபரேஷன் நடந்து முடிந்து தற்போது வீட்டில் நலமாக ஓய்வில் இருக்கிறார். அஜித் நடிப்பில் தற்போது ரிலீஸ் ஆகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளாம். இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படம் வசூலையும் குவித்து வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து கொண்டு உள்ள நிலையில், தற்போது அஜித்தின் அடுத்த படம் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அஜித்தின் அடுத்த படத்தை வீரம்,வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிறுத்தை சிவா மீண்டும் இயக்க உள்ளார். இப்படத்தை தனி ஒருவன் படத்தை தயாரித்த எஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்(ags entertiment) நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் உடன் அல்டிமெட் ஸ்டார் அஜித் நடிக்கிறார் என்பதை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
Tags:
அஜித்
,
சிவா
,
சிவா இயக்கத்தில் அமிதாப் பச்சன் தல அஜித்
,
சினிமா
,
வேதாளம்