போக்கிரி படத்தில் வடிவேலுவை பெண்டு நிமித்தும் அந்த குண்டு பையன்தான் மாஸ்டர் பரத். உத்தம புத்திரன், பஞ்சதந்திரம், வின்னர் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மாஸ்டர் பரத், இப்போது யூத் பரத்தாகிவிட்டார். பாய்ஸ் படத்தில் அறிமுகமான குண்டு பையனான நகுல் உடம்பை ஸ்லிம்மாக்கி ஆளே உருமாறி வந்தததை போல இப்போது பரத் தன் குண்டு உடலை இளைத்து ஸ்லிம்மாகி ஹீரோ லுக்கில் வந்து நிற்கிறார்.
ஆனால் அவருக்கு இப்போது நடிக்கும் ஐடியா எதுவும் இல்லையாம். படிப்புதான் முக்கியமாம். தற்போது கல்லூரியில் ரோபோட்டிக்கல் படித்து வருகிறார் பரத். படித்து முடித்து விட்டு ஹீரோவாக நடிக்க வர எண்ணமுள்ளதாம்.
Tags:
Cinema
,
சினிமா
,
போக்கிரி
,
மாஸ்டர் பரத்
,
ஸ்லிம்மான மாஸ்டர் பரத்