‘‘ஆண், பெண் யாரானாலும் தங்களின் முதல் காதலை மறக்க முடியாது’’ என்று நடிகை நயன்தாரா கூறினார்.
இரண்டு காதல்
நயன்தாரா, பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவரது பத்து வருடத்துக்கு மேலான சினிமா வாழ்க்கையில் நிறைய நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டார். இரண்டு நடிகர்களை வெளிப்படையாக காதலித்து தோல்வியை சந்தித்தார். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது முதல் காதல் அனுபவம் பற்றி நயன்தாரா மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
‘‘ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் முதல் காதல் எப்போதும் மனதில் நிற்கும். எந்த வயதிலும் அந்த காதல் வரலாம். வாழ்நாள் முழுவதும் அந்த காதலை மறக்க மாட்டார்கள்
முதல் காதல்
எனக்கும் சிறு வயதில் அப்படி ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது. அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அந்த பள்ளிக்கூடம் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக்கூடியது. நான் பையன்கள், பெண்கள் எல்லோரிடமும் சகஜமாக பழகுவேன். இதனால் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். ஒரு பையனைத் தவிர அனைவரும் என்னுடன் நட்போடு பழகினார்கள்.
நான் வகுப்புக்கு செல்லும்போதெல்லாம் எனது இருக்கை முன் உள்ள மேஜையில் ஒரு காதல் கடிதமும், ரோஜாப்பூவும் இருக்கும். முதல் நாள் அதை பார்த்து பதற்றமாக இருந்தது. தோழியிடம் சொன்னேன். பெரிதுபடுத்தாதே விட்டுவிடு என்றாள்.
முதல்வரிடம் புகார்
அதோடு நிற்கவில்லை. மறுநாளும் அதேபோல் ரோஜாவும் காதல் கடிதமும் மேஜையில் இருந்தது. ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது. இதனால் பயந்து போனேன். வீட்டில் எனது அம்மா, அப்பாவிடம் இதனை சொன்னேன். அவர்கள் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் புகார் செய்தார்கள். அவர் விசாரணை நடத்தி ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன்தான் தினமும் காதல் கடிதமும் ரோஜாப்பூவும் வைத்தவன் என்று கண்டுபிடித்தார். அவனை கடுமையாக திட்டி கண்டித்தார்.
அதன்பிறகு அவன் என் வழிக்கே வரவில்லை. என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவான். அந்த வயதில் அவனுக்கு காதல் பற்றி என்ன தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது. அதை என்னால் மறக்கவே முடியாது’’.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Tags:
Cinema
,
சினிமா
,
நடிகை நயன்தாரா பேட்டி