அஞ்சலி என்ற படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்கமுடியாது. அப்படத்தில் சிறிய குழந்தையாக நடித்தவர்தான் ஷாமிலி. தற்போது ஹிரோயின் அவதாரம் எடுத்த இவர் தெலுங்கில் அவரது பயணத்தை தொடங்கினார்.
தொடக்கமே முற்றுப்புள்ளியான ஆந்திராவிலிருந்து சென்னைக்கு பறந்து வந்து உடலை ஸ்லிம்மாக மாற்றி அடுத்த ரவுண்டுக்கு தயாரானார். அதனை தொடர்ந்து விக்ரம்பிரபு நடிக்கும் வீர சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில்தான் ஷாமிலி விஜய் ரசிகராக நடிக்கிறாராம். அஜித் தன்னுடைய சொந்த மாமா என்றும் யோசிக்காமல் அஜித் - விஜய் போட்டி உலகம் அறிந்த விஷயம் என்றும் இதனால் அஜித் ரசிகர்களிடையே தனக்கு கெட்ட பெயர் வருமோ என்று அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் தாராளமாக இந்த வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஷாமிலி.
வீர சிவாஜி படத்தை தொடர்ந்து தனுஷ், துரை செந்தில்குமார் இணையும் புதிய படத்திலும் ஷாமிலிதான் நாயகியாக நடிக்கப்போகிறாராம். முதல் முறையாக துரை செந்தில்குமார் படத்தில்தான் இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார் தனுஷ்.
Tags:
Cinema
,
அஜித்
,
நான் இளையதளபதி விஜய்யின் ரசிகை
,
விஜய்