கெளதம் மேனனில் கேரியரில் விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமான படம். மிகப்பெரிய வசூல் சாதனை செய்த அந்த படத்தில் சிம்பு-த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்தனர். அதேபோல் சிம்புவுக்கும் அது முக்கியமான படம்தான். அதன்பிறகு வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது மீண்டும் கெளதம்மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடிகர் சிம்பு, கடந்த மாதம் முழுவதும் சரத்குமாருக்கு ஆதரவாக நடிகர் சங்க தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் பிஸியாக இருந்தார். தேர்தலில் அந்த அணி தோற்றதால், சிறிது நாட்கள் வருத்தத்தில் இருந்தாராம் சிம்பு.
தற்போது அதை மறந்துவிட்டு, கௌதம் மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இரவு நேரத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது சிம்பு காலில் விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டதுதாம்.
இதனால் அவருடைய கால் வீங்கி விட்டதாம். உடனடியாக சிம்பு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிக்சை வழக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக உள்ளதாக அவரது தரப்பில் கூறியுள்ளனர்.
Tags:
Cinema
,
Simbu to Hospital
,
சிம்பு மருத்துவமனையில்
,
சினிமா