தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,
அவருக்கு கடந்த வாரம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சென்னை வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
”தூய்மையான அரசியலே தமிழகத்திற்கு தேவை. அத்தகைய அரசியலை கொடுக்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளது.
தமிழகத்தில் தூய்மையான அரசியலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தற்போது எங்கள் கட்சியை முன்னேற்றுவது, வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பேசி வருகிறோம்.
எனவே தற்போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த கேள்விக்கு இடமில்லை.
மேலும், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை.
ஆனால், கட்சி மேலிடம் உத்தரவிட்டால் அதை ஏற்பேன்.”
என நக்மா தெரிவித்துள்ளார்.
Tags:
காங்கிரஸ்
,
சினிமா
,
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்
,
நக்மா
,
நக்மா பேட்டி