பால் நடிகைக்கு அவரது கணவர் அளவிற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வீட்டில் அவரின் ஆதிக்கம் அதிகரிப்பதாகவும் குடும்பத்துக்குள் குமுறல் சத்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது.
இயக்குனரின் தந்தைக்குலம் தான் தயாரிப்பாளர் அந்தஸ்தில் இருந்தார். ஆனால் தற்போது அதையும் அவரது மனைவியான பால் நடிகையிடம் கொடுத்துவிட்டார். அதோடு வீட்டின் வரவு செலவுகளிலும் பால் நடிகை மூக்கை நுழைக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
விரைவில் பூகம்பம் வெடித்து நடிகை கணவனுடன் தனிக்குடித்தனம் செல்லலாம் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தில். இதற்கு வசதியாக இப்போதே ஈசிஆர் ரோட்டில் மகளுக்கு சொகுசான வீடு தேடி வருகிறாராம் நடிகையின் தாய்குலம்.
Tags:
AmalaPall News
,
Cinema
,
சினிமா