சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐபா) கடந்த 15 வருடங்களாக இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவை வெளிநாடுகளில் நடத்தி வருகிறது.
இப்போது முதன் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென் இந்திய படங்களை கொண்டாடும் வகையில் ஐபா உற்சவம் என்ற பெயரில் விழா நடத்துகிறது.
இந்த விழா நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், ராணா, நடிகைகள் மீனா, ரம்யாகிருஷ்ணன், தமன்னா, ஸ்ரேயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஐபா உற்சாகம் படவிழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளியான பாகுபலி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த சத்தியராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் விருது பெற்றனர்.
இந்த படத்துக்கு மொத்தம் 6 விருதுகள் கிடைத்தன. நின்னு, என்னுண்டே மைதீன், பிரேமம் ஆகிய படங்கள் தலா 5 விருதுகளை பெற்றன.
பிரிதிவிராஜ், பார்வதி ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. தனி ஒருவன் படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. நயன்தாராவுக்கு படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
காஞ்சனா சிறந்த திகில் காமெடி படமாக தேர்வு பெற்றது. இதில் நடித்த கோவை சரளாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது கிடைத்தது. தனி ஒருவன் படத்தில் நடித்த அரவிந்த்சாமி சிறந்த வில்லனாக தேர்வு பெற்றார். கத்தி படத்துக்கு இசை அமைத்த அனிருத் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை பெற்றார்.
சிறந்த பாடகருக்கான விருது ஹரிசரண், பாடகி விருது கீதாமாதுரி ஆகியோருக்கு கிடைத்தது. விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் நடிகர் நடிகைகள் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
மேலும் வாசிக்க…