கபாலி படத்தில் ரஞ்சித் விட்ட சின்னச் சின்ன தவறுகள் பாருங்கள்! வீடியோ

1:53 AM |
மேலும் வாசிக்க…

'கபாலி'க்கு இன்று சென்சார்! யூ சான்றிதழ் கிடைக்குமா??

1:17 AM |
உலகத் தமிழ் சினிமா ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு இப்போதைக்கு 'கபாலி' தான். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கபாலி படத்தின் திரையிடலுக்கான இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து சென்சார்க்கு படம் அனுப்பப்பட்டுள்ளது.

'கபாலி' திரைப்படத்தின் முதல் பிரிண்ட் ரெடி. கடந்த 6-ம்தேதி சென்சார் போர்டு உறுப்பினர்கள் இப்படத்தைப் பார்ப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் திடீரென அது ரத்தானது. இன்று கபாலி படத்தின் தமிழ் வெர்ஷனை , சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடவிருக்கிறார்கள் கபாலி  படக்குழுவினர். அதன் பின்னர்    சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் தரவிருக்கிறார்கள்.

கபாலியில் அப்பா, மகள் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக இருப்பதால் படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என்றும், இப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் சென்சார் முடிந்த பிறகு தான், தெலுங்கிலும், ஹிந்தியிலும் சென்சார் உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கவிருக்கிறார்களாம்.ஆனால் கபாலி  ரிலீஸ் தேதி குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாமலே  உள்ளது. இதற்குக்  காரணம் என்னவென்றால், பொதுவாக ஒரு படம் ரிலீஸாகிறது என்றால், அப்படம் சென்சார் சென்று வந்த பிறகு தான்தே ரிலீஸ் தியை அறிவிப்பது வழக்கம். அவ்வாறு செய்யும் போது படத்திற்கு எந்தத்  தடங்கலும் வராமல் குறித்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியும். அதையே தான் கபாலி படத்திற்கும் படக்குழு பின்பற்றுகிறது.

தவிர, அமெரிக்காவிலிருந்து ரஜினி, கடந்த 3ம் தேதி சென்னை திரும்பலாம் என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். உண்மையில் அந்த தேதியில் தான் அவருக்கு விமான டிக்கெட் போடப்பட்டிருந்ததாம். எந்திரன் 2.O படத்திற்கான வேலை நடந்துவரும் காரணத்தால், திடீரென அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டனர். எனவே வருகின்ற 12ம் தேதி ரஜினி வருவார் என்று சொல்லப்படுகிறது.

இதன்படி, தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஜூலை 22லும், மலாய்மொழியில் ஜூலை 29ம் தேதியும் படம் ரிலீஸாகிறது. இதைத் தொடர்ந்தே சீன மற்றும் தாய் மொழிகளில் ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்திருப்பதாகச்  சொல்லப்படுகிறது. எனவே, சென்சார் முடிந்தறகே இந்த தேதிகளை, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்கிறது படக்குழு.
மேலும் வாசிக்க…

சரியாக படம் பிடிக்காததால் மீண்டும் படமாகும் கபாலி..!!

11:03 PM |
ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. இதில் மலேசியா சிறையில் ரஜினி இருப்பதுபோல் ஒரு முக்கியமான போர்ஷன் படமாக்கப்பட்டது.

தற்போது இதன் ரஷ் பார்த்த இயக்குனருக்கு இதில் திருப்தியில்லையாம். எனவே இந்த போர்ஷனை மட்டும் அவர் மீண்டும் படமாக்க திட்டமிட்டுள்ளாராம். எனவே இதற்காக கபாலி படக்குழு விரைவில் மீண்டும் மலேசியா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன் வேண்டாம் என ரஜினி கூறியது ஏன்?

10:44 PM |
சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே ரஜினிமுருகன் என்று தன் படத்திற்கே தலைப்பு வைத்தார்.

இந்நிலையில் கபாலி படத்தில் இளம் வயது ரஜினிக்கு அவரின் இளமை குரல் தேவைப்பட்டுள்ளது, சிவகார்த்திகேயன் அப்படியே ரஜினி மாதிரியே பேசுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

சிவகார்த்திகேயனிடம் இதுப்பற்றி கூற, அவரும் சந்தோஷத்துடன் ஓகே சொல்ல, ஆனால், ரஞ்சித், ரஜினி இருவருக்குமே இவருடைய குரலில் ஒரு திருப்தி இல்லையாம். இதனால், மீண்டும் ரஜினி குரலுக்கு தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com