தன் படங்களுக்கு சொந்த குரலில் டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்..!!

1:32 AM |
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளாவார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமானது ரஜினி முருகன்படத்தில்தான். ஆனால், அதன்பிறகு இவர் நடித்த இது என்ன மாயம் படம் முதலில் வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இருப்பினும் அதன்பிறகு வெளிவந்த ரஜினிமுருகன் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும்தொடரி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தற்போது விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படமொன்றிலும் இவர்தான் கதாநாயகி. இப்படி குறுகிய படங்களிலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தான் நடிக்கும் படங்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசி வருகிறாராம்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் திறமைகொண்ட கீர்த்தி சுரேஷ், இரண்டு மொழிகளிலும் இவர் நடிக்கும் படங்களுக்கு இவரே டப்பிங் பேசுகிறாராம். இதனாலேயே தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தெறி ரிலிஸ் தள்ளிப்போகிறது..!!

7:14 AM |
தெறி படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் ரிலிஸ் ஆகவிருந்தது.

இந்நிலையில் ஒரு முன்னணி தெலுங்கு இணையத்தளத்தில் கூறுகையில், தெறி படத்தின் தெலுங்கு பதிப்பில் சில தொழில் நுட்ப பிரச்சனை இருக்கின்றதாம்.

இதனால், படம் தெலுங்கில் மட்டும் ஒரு நாள் தள்ளி ஏப்ரல் 15ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி உண்மையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com