தன் படங்களுக்கு சொந்த குரலில் டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்..!!

1:32 AM |
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளாவார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமானது ரஜினி முருகன்படத்தில்தான். ஆனால், அதன்பிறகு இவர் நடித்த இது என்ன மாயம் படம் முதலில் வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இருப்பினும் அதன்பிறகு வெளிவந்த ரஜினிமுருகன் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும்தொடரி படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தற்போது விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படமொன்றிலும் இவர்தான் கதாநாயகி. இப்படி குறுகிய படங்களிலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தான் நடிக்கும் படங்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசி வருகிறாராம்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் திறமைகொண்ட கீர்த்தி சுரேஷ், இரண்டு மொழிகளிலும் இவர் நடிக்கும் படங்களுக்கு இவரே டப்பிங் பேசுகிறாராம். இதனாலேயே தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய் படத்தில் இணைந்த RJ பாலாஜி..!!

2:41 AM |
சைவம், இது என்ன மாயம் படங்களின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் AL விஜய் இயக்கும் புதிய படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கியுள்ளது. பிரபுதேவா ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் RJ பாலாஜியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com