கௌதம் மேனன் என்றாலே ரொமாண்டிக் படங்களுக்கு பெயர் போனவர் என்பது யாவரும் அறிந்ததே. அவரது படங்களில் அதீத கவர்ச்சிகள் இல்லாமல் அதே சமயம் கண்களை உறுத்தாத எதார்த்தமான ரொமான்ஸ் காட்சிகளாக அமைப்பார். தற்போது தன் சொந்த ரொமான்ஸ் வாழ்க்கை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
“ இது குறித்து பேசுகிறேன் எனத் தெரிந்தால் ப்ரித்தி (மனைவி) என்னைக் கொன்று விடுவார்... அவங்களுக்கு பிடிக்கவும் பிடிக்காது என ஆரம்பித்தவர். நாங்கள் இருவரும் 3ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையிலிருந்து நண்பர்கள். நாங்கள் எப்போதும் ஒரே குழுவில் தான் இருப்போம், நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்தோம், எப்படி இரு பையன்கள், பெண்கள் இருப்பார்களோ அப்படியான நட்பாக தான் இருந்தது. எனது தலைமை ஆசிரியையின் மகள் அவர். மேலும் என் சகோதரிக்கு தோழியும் கூட. அப்படித்தான் பழக ஆரம்பித்தோம்.
எங்களுக்குள் நட்பு உருவாகி ஒரு கட்டத்தில் காதல் உருவானது. என்னிடம் சொல்லாமலே காதலித்திருக்கிறார் ப்ரீத்தி. வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த நெருக்கடியாலேயே இதை என்னிடம் சொல்லியதாகச் சொன்னார். அந்தச் சமயத்தில் தான் நான் இயக்குநராக முயற்சி செய்துகொண்டிருந்தேன். அதனால் பதில் ஏதும் சொல்லவே இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நானும் அவர் பால் ஈர்க்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
எனக்கு ப்ரீத்தியுடன் இருக்க வேண்டும் என தோன்றியது. எனக்காக அவரும் என்னுடன் எப்போது ஒரு பக்கத் துணையாக தூணாக நின்றார். திருமணம் செய்துகொண்டோம். எனது முதல் படம் கூட நான் முடித்திருக்கவில்லை. என் கைகளில் ஒண்ணுமே இல்லை. இப்போது 16 வருடங்கள் உருண்டோடி விட்டன என தனது காதல் மனைவி குறித்து மனம் திறந்துள்ளார் ஸ்டைலிஷ் காதல் பட இயக்குநர் கௌதம் மேனன்.
Tags:
Cinema
,
அதீத கவர்ச்சிகள்
,
கௌதம் மேனன்
,
சினிமா
,
ப்ரித்தி
,
ரொமாண்டிக் படங்கள்