அக்க்ஷய்குமார் லண்டன் பொலீஸாரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையின் செய்தித் தகவல் படி அக்க்ஷய் குமார் ஏப்ரல் 6ம் திகதி மும்பையிலிருந்து லண்டனுக்கு தனது உதவியாளருடன் சென்றுள்ளார்.
லண்டனின் ஹீட்த்ரூ விமான நிலையத்தில் அக்க்ஷய் குமாரின் விசாவை பரிசீலனை செய்த போது அது முறையான ஸ்டாம்ப்களின்றி இருக்கவே அவரைக் கைது செய்துள்ளனர்.ஐரோப்பா நாடுகளின் சட்டப்படி சுற்றுலாவாசியாக செல்லும் நபர்களுக்கு விசா அவசியமில்லை. அதே சமயம் படிப்புஇ வேலை உள்ளிட்ட காரணங்கள் கருதி செல்வோர்இ கண்டிப்பாக முறையான ஸ்டாம்புகள் அச்சிடப்பட்ட தகுந்த விசாக்களுடன் வரவேண்டும்.
இங்கே அக்க்ஷய் குமார் சுற்றுலா வாசிகள் வருவது போல் தகுந்த ஆதாரமில்லா விசாவுடன் வந்துள்ளார். ஆனால் அவர் வந்தக் காரணம் ரஸ்டோம் என்னும் தனது அடுத்த பாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக என்பதால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கைது செய்யப்பட்டு விசாரிக்கும் அறையில் வைக்கப்பட்டுள்ளார்.
Tags:
Cinema
,
அக்க்ஷய் குமார்
,
சினிமா
,
மும்பை
,
லண்டன்