நடிகர் கலாபவன் மணி, கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 6ம் தேதி மரணமடைந்தார். இவரது திடீர் மறைவு மலையாள திரை உலகினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மர்ம மரணம் குறித்து சாலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் கலாபவன் மணியின் ஒரே மகள் ஸ்ரீலட்சுமி (15). சாலக்குடியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை இறந்ததால். தேர்வு எழுத முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால், உறவினர்களின் வற்புறுத்தலை தொடர்ந்து நேற்று இந்தி தேர்வு எழுதுவதற்காக கலங்கிய கண்களுடன் பள்ளிக்கு சென்றார். அவரை சக மாணவிகள் கண்ணீருடன்வரவேற்றனர்.
Tags:
Cinema
,
இந்தி தேர்வு
,
கலாபவன் மணி
,
சினிமா
,
திரை உலகினர்
,
மாணவிகள்
,
ஸ்ரீலட்சுமி