ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்திருக்கும் காமெடி பேண்டஸி திரைப்படம் போக்கிரி ராஜா. இப்படத்தின் டிரைலர் ஒரு மணிநேரத்துக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக இப்படம் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் மார்ச் 4-ல் தான் வெளியாகும் என படக்குழுவே அறிவித்துள்ளது. திடீரென இப்படம் தள்ளி போவதற்கு காரணம் பிப்ரவரி 26-ல் கணிதன், ஆறாது சினம் போன்ற படங்கள் வெளியாவது தான் என கூறப்படுகிறது.
தாணு மற்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் படங்கள் வெளியாவதால் அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என இப்படம் தானாகவே தள்ளிபோய் இருப்பதாக சொல்லப்படுகிறது.
Tags:
Cinema
,
ஆறாது சினம்
,
கணிதன்
,
சிபிராஜ்
,
சினிமா
,
போக்கிரி ராஜா
,
ஜீவா
,
ஹன்சிகா