விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று பிப்ரவரி 24-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது. இருப்பினும் இந்த மாதத்தின் இறுதியில் (பிப்ரவரி 29) டீசர் வெளியாகிவிடும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், பிப்ரவரி 29-ந் தேதியும் டீசரை வெளியிட முடியாத சூழ்நிலையில் படக்குழுவினர் உள்ளனர்.
அதாவது, ‘24’ படத்தின் டீசரில் சில கிராபிக்ஸ் பணிகள் பாக்கி இருக்கிறதாம். அந்த பணிகள் முடிவடைய இன்னும் கொஞ்சம் நாள் பிடிக்குமாம். அந்த பணிகள் அனைத்தையும் இந்த மாதத்திற்குள் முடிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாம். ஆகவே, இந்த மாதத்தில் ‘24’ டீசர் வெளியாகது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து பணிகளை முடித்துவிட்டு விரைவில் டீசர் வெளியாகும் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
Tags:
24 Trailer
,
24 டீசர்
,
24 டீசர் ரிலீஸ்
,
Cinema
,
Surya 24 Trailer