நடிகர் ஜீவாவின் 25 வது படம் போக்கிரி.இந்த படத்தை பி.டி செல்வக்குமார் தயாரிக்கிறார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். ஜீவாவுக்கு ஜோடி ஹன்சிகா, வில்லனாக சிபிராஜ் நடிக்கிறார். இசை இமான். வனராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜீவா ஒரு பொறுப்புள்ள மென் பொறியாளராகவும், சிபிராஜ் பொருப்பில்லாத இளைஞராகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
‘போக்கிரிராஜா’ படம் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1982-ல் வெளியானது. ஏவி. எம். நிறுவனம் தயாரித்தது. “போக்கிரிக்கு போக்கிரி ராஜா, விடியவிடிய சொல்லித்தருவேன், வாடா என் மச்சீகளா…” போன்ற இனிமையான பாடல்களும் இடம்பெற்ற படம் அது.