கடந்த தீபாவளி தினத்தில் அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அஜித் தற்போது அறுவை சிகிச்சை செய்து முழு ஓய்வில் இருப்பதால் அவருடைய அடுத்த படம் வரும் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்பே தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் அஜீத் படத்திற்கு முன்பாக இன்னொரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கவுள்ளார். 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
விக்ரம்பிரபு-எஸ்.ஆர்.பிரபாகர் படத்தை தயாரித்து முடித்த பின்னர் அஜீத்-சிவா மீண்டும் இணையும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
அஜீத்
,
அஜீத்தை முந்தினார் விக்ரம்பிரபு
,
சினிமா
,
விக்ரம்பிரபு
,
வேதாளம்