வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களுக்கு ச்ச்சு கொட்டுவதற்குள் அடுத்த சூறாவளியை உள்ளே நுழைத்து அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள் சிலர். இதில் சிக்கிக் கொண்டு முழிப்பது சிம்பு தான். என் வீட்டில் இருந்த பாடலை யாரோ திருடி வெளியிட்டதற்கு நான் எப்படி பொருப்பு ஏற்க முடியும் என்று சிம்பு தரப்பும், நீ தானே அந்த கேவலமான பாட்டை பாடினது அப்போ உன் சட்டையைத்தான் பிடிப்போம் என்று சிம்புவையும் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது பிரச்சனை.
இந்நிலையில் சிம்புவின் வீட்டில் இருந்த பாடல் வெளியானது எப்படி என்று தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அனிருத் இசையமைத்து சிம்பு பாடியதாக கூறப்படும் அந்த பீப் பாடல் அனிருத் அவருடைய செல்போனிலிருந்து சிவகார்த்திகேயனுக்கு அனுப்பியதாகவும் அதை சிவகார்த்திகேயன் அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு ஃபார்வேட் செய்ததாகவும் அதனால் தான் இந்த பாடல் உலகத்துக்கு தெரிய வந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.
சிம்பு, அனிருத்தை அடுத்து தற்போது சர்ச்சையில் சிவகார்த்திகேயன் பெயரையும் எழுதிவிட்டார்கள் போராட்டகாரர்கள்.
Tags:
Cinema
,
சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயனா
,
சினிமா