மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு டோலிவுட் நடிகர்கள் திரட்டி வரும் நிதிக்கு ரூ 30 லட்சத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார் நடிகை சமந்தா. மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு டோலிவுட் நடிகர்கள் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவி செய்து வருகின்றனர்.
மேலும் ‘நம்ம சென்னைக்காக’ (மன மெட்ராஸ்கொசம்) என்ற ஒரு அமைப்பை உருவாக்கி மக்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்டி வருகின்றனர்.
ஏற்கனவே முன்னணி தெலுங்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்த நிலையில், நடிகை சமந்தாவும் ரூ 30 லட்சத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
நடிகை சமந்தா ரூ 30 லட்சம் வழங்கி இருப்பதை சென்னை மக்களுக்காக தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப்பொருட்களை சேகரிப்பது மற்றும் அது தொடர்பான பணிகளில் நடிகை சமந்தா தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
சென்னைக்காக..ரூ 30 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சமந்தா