‘தல’ அஜித் தற்போது மூன்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். அதேசமயம் சிவா இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ‘பில்லா’ பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி தயாரிக்கவேண்டும் என அஜித் விரும்புவதாகவும் இதற்காக அவரிடம் அஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
மீண்டும் பில்லா கூட்டணியுடன் இணையும் அஜித்