சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு திகில் கலந்த பேய் படமாக வெளியாகி மாபெறும் வெற்றி பெற்ற படம் அரண்மனை. தற்போது அதனை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி .
இப்படத்தில் சித்தார்த், சுந்தர்.சி, ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, சுந்தர்.சி,நடிக்த்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் ஜனவரி 29ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், அரண்மனை-2 முதல் பாகம் படத்தின் கதையின் தொடர்ச்சிதான் என்றும், லட்சுமிராய் கேரக்டருக்கு பதில் த்ரிஷா நடிக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் இது அரண்மனை படத்தின் தொடர்ச்சி அல்ல இது வேறு கதை தான் என்று தற்போது உறுதியாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:
Cinema
,
அரண்மனை-2 முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல
,
சினிமா
,
த்ரிஷா
,
ஹன்சிகா