ஆபாச பாடலுக்கு எதிராக பெண்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள். எல்லா ஊர்களிலும் சிம்பு, அனிருத் உருவ பொம்மைகளை எரிக்கிறார்கள். கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிம்புவும், அனிருத்தும் வருகிற 19ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நகரில் மட்டும் 60க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருக்கிறது.
சிம்பு “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்குதான் இருக்கிறேன். பிரச்னைகளை சட்டப்படி எதிர்கொள்வேன். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். கனடா நாட்டிற்கு தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்தச் சென்றிருக்கும் அனிருத் , திட்டப்படி நேற்று சென்னை திரும்பியிருக்க வேண்டும். நேற்று திரும்புவதற்காக அவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதனால் மீடியாக்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
ஆனால் நேற்று அனிருத்துடன் சென்ற இசை குழுவினர் மட்டுமே திரும்பியுள்ளனர். அனிருத் திரும்பவில்லை. அவர் டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டு கனடாவிலேயே தஞ்சமாகிவிட்டாக கூறப்படுகிறது. போலீசில் ஆஜர், பெண்களின் போராட்டம், மீடியாக்களின் துரத்தல் ஆகியவை காரணமாக அவர் இந்தியா திரும்பவில்லை. இதற்கிடையில் அனிருத்தை கனடாவிலிருந்து மும்பை அல்லது ஐதராபாத்துக்கு வரவழைத்து அங்கிருந்து பத்திரமாக சென்னை அழைத்து வர அவரது உறவினர்கள் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
அனிருத்
,
அனிருத் கனடா நாட்டில் தஞ்சம்
,
சினிமா