வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜின் அடுத்த படம் ”தங்க மகன்”.
வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டாலும் கதை அதன் தொடர்ச்சி அல்ல. அதைப்போன்ற ஒரு நடுத்தர குடும்பத்து பையனின் கதை.
இதில் தனுஷின் அப்பாவாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும், அம்மாவாக ராதிகாவும் நடிக்கிறார்கள் வி.ஐ.பியில் சமுத்திரகனி, சரண்யா நடித்த மாதிரியான கேரக்டர். ஒரு நடுத்தர குடும்பத்து மகன் திருமணத்துக்கு முன்பு காதல், ரொமான்ஸ் என்று பொறுப்பில்லாமல் திரிந்து திருமணத்துக்கு பிறகு எப்படி குடும்ப பொறுப்புள்ளவனாகிறான் என்கிற கதை. இதில் தனுஷ் திருமணத்துக்கு முன்பு எமியுடன் ரொமான்சாக இருப்பார்.
இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் இருக்கிறது. அப்பா அம்மா விருப்பத்துக்காக சமந்தாவை திருமணம் செய்து கொண்டு எப்படி வாழ்கிறார் என்பது அடுத்த போர்ஷன். இதில் இளம் மனைவியாக சமந்தாவின் நடிப்பும், புகுந்த வீட்டில் அவரது அணுகுமுறையும் அப்படியொரு பாந்தமாகவும் இருக்குமாம்.
அனிருத் இசை அமைத்துள்ளார், ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளர், டிசம்பர் 18ந் தேதி ரிலீசாகிறது. அனேகன், வேலையில்லா பட்டதாரி, மாரி என தொடர் வெற்றிகளை குவிக்கும் தனுசுக்கு இதுவும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்கிறார்கள்.
Tags:
Cinema
,
இணையத்தில் வெளிவந்த ‘தங்க மகன்’ படத்தின் கதை
,
சினிமா
,
மாரி