‘கும்கி’ லட்சுமி மேனன் வேதாளம் படத்தில் அஜீத் தங்கையாக நடித்தார். ஹீரோவின் தங்கையாக நடித்தால் அந்த முத்திரையை குத்திவிடுவார்கள் என்பதால் இந்த வேடத்தில் பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்துவிட்டனர். முதலில் தயக்கம் காட்டிய லட்சுமி மேனன் பிறகு நடிக்க சம்மதித்தார். படம் ெவளியான பிறகு லட்சுமி மேனனுக்கு புதிய படங்கள் எதுவும் வராததால் அப்செட் ஆனார். ஆனாலும் தங்கை வேடத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு கூடுதல் சம்பளம் தர அஜீத் சிபாரிசு செய்தார்.
தற்போது இனிக்கும் செய்தியாக ஜீவாவுடன் ஜோடியாக நடிக்க லட்சுமி மேனனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. புது இயக்குனர் முத்துகுமார் இயக்கும் இப்படத்துக்கு ஜெமினி கணேசன் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மிருதன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜீவா போக்கிரி ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெமினி கணேசன் படத்தில் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டு வந்ததாக கோலிவுட்டில் பேச்சு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
தங்கை இமேஜ் உடைந்தது லட்சுமி மேனன் சினிமா
,
லட்சுமி மேனன்
,
வேதாளம்