திடீரென நடிகர் சங்க உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் பல வருடங்கள் கழித்து நடிகர் சங்க தேர்தல் நடந்தது விஷால் அணி வெற்றி பெற்றது.
இந்த நேரத்தில் அவர்களை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை ஆற அமர உட்கார்ந்து பேசினார்களாம் அதில் தான் அஜித் பற்றியும் பேச்சு வந்திருக்கிறது ஓட்டு கேட்க வருகிறோம் என்று அப்பாயின்மென்ட் கேட்ட இரு அணிகளையும் வராதீங்க ப்ளீஸ் என்று கூறிவிட்டார் ராம் அஜித்.
அதோடு இந்த நடிகர் சங்க தேர்தலையே அஜித் புறக்கணித்துவிட்டார் இது குறித்து பேசும்போது இனி எதிர்காலத்தில் நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால் கூட நடிகர் சங்கம் சார்பில் அஜித்தை அழைப்பதில்லை மற்றும் எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது என்றும் ஆவேசப்பட்டார்களாம்.
இந்த தகவல் அஜித் காதுகளுக்கு செல்ல இடது உதட்டோரம் லைட்டாக ஒரு புன்னகையை வீசிவிட்டு நடையை கட்டிவிட்டாராம் இதனால் கோலிவுட்டில் எதிர்காலத்தில் நிறைய பரபரப்பு ஏற்படலாம் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா