பெரும்பாலும் நடிகைகள் தங்களை வீடு தேடி யாராவது சந்திக்க வந்தாலும் ஒரு மணி நேரமாவது கண்ணாடி முன் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொண்டுதான் அவர்களை சந்திப்பார்கள்.
அதோடு சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் என்றால் சொல்லவே வேண்டாம் தங்களது மேக்கப்மேன் காஸ்டியூமர் ஹேர் டிரஸ்ஸர்களை அதிகாலையிலேயே வீட்டுக்கு வரவைத்து தங்களை அலங்காரம் செய்து கொண்டுதான் வெளியில் என்ட்ரி கொடுப்பார்கள்.
தங்களது நிஜ தோற்றத்தை எந்த காரணம் கொண்டும் வெளியில் காட்டக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
ஆனால் அனுஷ்கா இந்த விசயத்தில் மாறுபட்டவராக இருக்கிறார் அவருக்கு நடிக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் மேக்கப் போட்டுக்கொள்வதே பிடிக்காதாம் எத்தனை பெரிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சாதாரணமாக செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம்.
சென்னையில் நடைபெற்ற இஞ்சி இடுப்பழகி படத்தின் ஆடியோ விழாவுக்குகூட நார்மலான தோற்றத்தில்தான் வந்திருந்தார் அனுஷ்கா.
அதையடுத்து அவர் பேசும்போது எனது பெற்றோர் சின்ன வயதில் இருந்தே நான் ரொம்ப அழகாக இருப்பதாக சொல்வார்கள் ஆனால் என்னைப்பொறுத்த வரை ஒருநாளும் உடல் அழகை பெருமையாக எண்ணிக்கொண்டதில்லை.
எப்போதுமே மனசை அழகாக வைத்திருக்க வேண்டும் அதுதான் சிறந்த அழகு என்பது எனது கருத்து அதனால்தான் நடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் நான் பெரிதாக மேக்கப் போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.
மேலும் இந்த இஞ்சி இடுப்பழகி படத்தில் கூட உடல் அழகினை விட மனசின் அழகுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது அதனால்தான் இந்த கதையில் நான் அதிக ஈடுபாடு காட்டி நடித்தேன் என்கிறார் அனுஷ்கா.
Tags:
அழகாக வைத்திருக்க வேண்டு
,
அனுஷ்கா
,
உடலைவிட மனசைதான்
,
சினிமா