ஐ என்ற பிரமாண்ட ஹிட்டிற்கு பிறகு இனி தன் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என்று விக்ரம் களத்தில் இறங்கியுள்ள படம் தான் 10 எண்றதுக்குள்ள. 4 சிறுவர்களை மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய ‘கோலிசோடா’ புகழ் விஜய் மில்டன் இந்த முறை கோலிசோடா பேக்ட்டரி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார்.
இதற்கு யானை பலம் சேர்க்கும் அளவிற்கு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது. இன்று இப்படம் உலகம் முழுவதும் பல திரையங்குகளில் வெளிவந்துள்ளது.
கதை:
இந்தியாவின் ஒதுக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தில் இன்றும் சாதி கொடுமைகள் நடந்து வருகின்றது. அந்த வகையில் உத்ரகாண்ட் மாநிலத்தில் கீழ் சாதியினர் அத்து மீறி கோவிலுக்குள் நுழைந்ததால் 40 பேரை வெட்டி கொல்கின்றனர்.
அங்கிருந்து கதை சென்னை நகர்கிறது. விக்ரம் 10 எண்றதுக்குள்ள யார் என்ன சொன்னாலும் செய்து முடிக்கும் திறமைசாலி. அந்த வகையில் பசுபதி கேங்கிற்கு வரவிருக்கும் பொருளை விக்ரம் அந்தரத்தில் காரில் பாய்ந்து அலேக்காக தூக்கி செல்கிறார்.
அதே நேரத்தில் ஒரு ட்ரைவிங் ஸ்கூல் டீச்சராகவும் விக்ரம் தன் வாழ்க்கையை பயணிக்க. அந்த ட்ரைவிங் ஸ்கூலில் குறும்பு பெண்ணான சமந்தா மாணவியாக சேர்ந்து விக்ரமை டார்ச்சர் செய்கிறார்.
பசுபதி கொடுக்கும் வேலைகளை எல்லாம் விக்ரம் அசால்டாக முடிக்கிறார். இதற்கிடையில் வட இந்திய கூலிப்படை ஒன்று சமந்தாவை கடத்த சொல்லி பசுபதிக்கு வேலை கொடுக்கிறது. அவர்களும் சமந்தாவை கடத்த, அவர்கள் வரும் வண்டியை போலிஸ் பிடிக்கின்றது. போலிஸிடம் இருந்து வண்டியை மீட்டெடுக்க விக்ரம் உதவியை நாடுகிறது பசுபதி குரூப்.
அவரும் காரில் பறந்து வந்து பல்டி அடித்து காரை மீட்டெடுக்க, அவரையே அந்த காரை வில்லன் குரூப்பிடம் ஒப்படைக்க சொல்கிறார் பசுபதி. ஆனால் வண்டியில் சமந்தா இருப்பது விக்ரமிற்குமே தெரியாது, பின்பு சமந்தா வண்டியில் இருப்பது சில பிரச்சனைகளால் அவருக்கு தெரிய வர, பிறகு பையா ஸ்டைலில் வட இந்தியா வை நோக்கி பயணம் போகிறது.
விக்ரம் கடைசி வரை கார் தான் ஒப்படைக்க வேண்டும் என நினைக்க பிறகு தான் தெரிகின்றது சமந்தாவிற்காக தான் அந்த கும்பல் அழைகின்றது என, சமந்தா அவர்களுக்கு எதற்கு வேண்டும்? என்பது ஒரு டுவிஸ்ட்டுடன் தெரிய வர, எப்படி அந்த கும்பலிடம் இருந்து சமந்தாவை விக்ரம் காப்பாற்றினார் என்பதை 1000 எண்றதுக்குள்ள கூறியிருக்கிறார் விஜய் மில்டன்.
க்ளாப்ஸ்
விக்ரம் எந்த கதைக்கு நான் ரெடி என்பது போல் இதிலும் கலக்கியுள்ளார்
பசுபதியின் பரிதவிப்பு ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டுகிறது, அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றது..
கிளைமேக்ஸில் வரும் டுவிஸ்ட், அதன் பின் வரும் காட்சிகள்
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை....திரைக்கதையில் அத்தனை தடுமாற்றாம்..விக்ரமின் ப்ளாஷ் பேக் காட்சி எந்த ஒரு அழுத்தமும் இல்லை
சமந்தாவிப் ஓவர் ஆக்டிங் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது...
மொத்தத்தில் 10 எண்றதுக்குள்ள டைட்டிலுக்கு ஏற்ற விறுவிறுப்பு எங்கே என்று கேட்க தோன்றுகின்றது
ரேட்டிங்- 2.5
Tags:
10 Endrathukulla Review
,
10 எண்றதுக்குள்ள திரை விமர்சனம்
,
10 எண்றதுக்குள்ள விமர்சனம்
,
Reviews