பத்தாண்டுகளுக்குப் பிறகு வசூலில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்ட படமென்று பாகுபலி படத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்தப்படம் செய்த சாதனையை ஒரேமாதத்தில் முறியடித்திருக்கிறதாம் தனிஒருவன்.
ஜூலை பத்தாம்தேதி பாகுபலி படம் வெளியானது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி தனிஒருவன் வெளியானது. செப்டபம்பர் 14 ஆம் தேதி இரவுக்காட்சியோடு பாகுபலி வசூலை தனிஒருவன் சமன் செய்துவிட்டதாம். இந்தத்தகவலை, தற்காப்பு பட பாடல்வெளியீடு நிகழ்ச்சியில் பேசி கமலா திரையரங்கஉரிமையாளர் கணேஷ் தெரிவித்தார்.
அவர் பேசும்போது, நேற்று இரவுக்காட்சியோடு பாகுபலி வசூலை தனிஒருவன் சமன் செய்துவிட்டது. அடுத்தவாரம் இந்த விழா நடந்திருந்தால், பாகுபலியை மிஞ்சிவிட்டது என்று சொல்லியிருப்பேன்.
பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து எங்களுக்கு ராஜமௌலி இருக்கிறார் என்று ஆந்திரநண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள், இப்போது நாமும் நமக்கு ராஜா இருக்கிறார் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று பேசினார்.
Tags:
baahubali Box Office Is Equal To Thani Oruvan
,
Cinema
,
சினிமா
,
தனிஒருவன்