அஜித், ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு நல்ல மனிதநேயமிக்கமுள்ள மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய படங்களை பிடிக்காதவர்கள் கூட, அஜித்தின் குணநலன்களையும் பிறருக்கு உதவும் தன்மையையும் போற்றி புகழ்ந்துவருவது உண்டு.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற அஜித், ரூ.25 லட்சம் கொடுத்து உதவியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த சிறுமி அஜித்தின் டேட்டோவை தனது கையில் பதிவு செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித், அந்த சிறுமி யார்? அவருடைய அப்பா என்ன தொழில் செய்கிறார்? என எந்த கேள்வியும் கேட்காமல், சிகிச்சைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை மட்டும் கேட்டு உடனடியாக உதவி செய்துள்ளாராம். இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகவும் தற்போது அந்த சிறுமி நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அந்த சிறுமியின் தந்தை, ‘என்னிடம் எந்த வசதியும் இல்லாதபோது அஜித் எனக்கு உதவி செய்தார். தற்போது அவர் ஒப்புக்கொண்டால் எனது சொத்து முழுவதையும் அவருக்கு கொடுக்க தயாராக இருக்கின்றேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா