தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட சம்பவம் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் உள்ள கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதே விழாவில் கலந்து கொண்ட கமலுடன் சிவகார்த்திகேயன் மேடையில் சிரித்து பேசியபடியே இருந்தார்.விழா முடிந்து சிவகார்த்திகேயனிடம் இது பற்றி கேட்கப்பட்டதற்கு, எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.
Tags:
Cinema
,
சினிமா