நான் ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் தற்போது இளைய தளபதி விஜய் நாயகனாக நடித்து வரும் புலி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சுதீப் தனது மனைவி ப்ரியாவை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை இருவரும் இணைந்தே எடுத்ததாக தெரிகிறது.
கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2004ஆம் ஆண்டு சான்வி என்ற மகள் பிறந்தார். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 14 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சுதீப் தனது மனைவி ப்ரியாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.19 கோடி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுதீப்-ப்ரியாவின் மகள் சான்வி, மைனர் என்பதால் ப்ரியாவிடமே இருக்கவும் சுதீப் சம்மத்தித்துள்ளதாகவும் தெரிகிறது.
Tags:
Cinema
,
Puli Villain
,
சினிமா
,
புலி வில்லன் சுதீப்