ஸ்ரீதேவி பல காலம் கழித்து புலி படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். இப்படத்தில் நடிக்க ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா ஆகியோரை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்புதேவன் மீது ஸ்ரீதேவி கோபமாக இருப்பது ஒரு செய்தி பரவி வருகிறது.
ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருக்கு டப்பிங் பேச ஆள் தேடியுள்ளார் சிம்புதேவன்.
இது குறித்து அறிந்த ஸ்ரீதேவி எனக்கு டப்பிங்கிற்கு ஆள் எதற்கு நானே பேசுகிறேன் என்றுகூறி, தான் நடித்த காட்சிகளுக்கு இரண்டே நாட்களில் டப்பிங் பேசி முடித்துள்ளாராம்.
டப்பிங் பேசுகையில் தான் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதை ஸ்ரீதேவி தெரிந்து கொண்டாராம். நான் அத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தால் நீங்கள் பல காட்சிகளை எனக்கு தெரியாமல் எதற்காக நீக்கினீர்கள் என்று பொங்கிவிட்டாராம்.
Tags:
Cinema
,
சினிமா