அஞ்சலி நடித்த மாப்ளசிங்கம் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது, இதற்கடுத்து கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார்.
இறைவி தவிர ஓரிருபடங்களில் நடிப்பதற்காகப் பேச்சுகள் நடந்துகொண்டிருக்கிறதாம். இந்நிலையில் அவர் ஒருபடத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று கேட்டால், ஒருநாளைக்கு எட்டுலட்சம் சம்பளம் கேட்கிறார் என்று செய்திகள் வருகிறது.
இதுகுறித்து அஞ்சலி தரப்பில் கேட்டால், இது முற்றிலும் தவறான தகவல், கதாநாயகிகள் பெரும்பாலும் நாள் கணக்கில் சம்பளம் கேட்கமாட்டார்கள் அஞ்சலியும் அப்படித்தான் என்று சொல்லிவிட்டனர்.
தொடர்ந்து தன்னைப் பற்றி இப்படி தவறான செய்திகள் வந்துகொண்டிருப்பதால் அஞ்சலி வருத்தத்தில் இருக்கிறாராம்.
Tags:
Anjali News
,
Cinema
,
சினிமா