விஷாலின் காதலி யார்? யாருடனோ அவர் கல்யாணம் பண்ணாமலேயே குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறாராமே? அந்தப் பெண்ணின் பெயரில் கூட லட்சுமி என்ற வார்த்தை உள்ளதாகச் சொல்கிறார்களே? -இப்படி மீடியாவும் அவற்றைப் படிக்கி ரசிகர்களும் கிசுகிசுத்து வருகிறார்கள்.
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை அவர்கள் பார்த்தால் ஒருவேளை சந்தேகம் தீரலாம். படத்தின் க்ளைமாக்ஸில் ஆர்யா, சந்தானம் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வருகிறார் உதவி கமிஷனர் விஷால்.
அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது, மனைவியிடமிருந்து. “சொல்லும்மா செல்லம்..” என அவர் பேச ஆரம்பிக்க, அந்தப் பக்கமிருந்து நாம் நன்கு கேட்டுப் பழகிய குரல். உடனே சந்தானம் விஷாலிடம் இப்படிக் கேட்பார்: “சார் உங்க மனைவி பேரு டேஷ் லட்சுமியா… லட்சுமி டேஷா?” என்று கேட்பார்.
கட் பண்ணால் அடுத்த சீன். அதில் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டு ‘மனைவி லட்சுமி’ போனில் பேசிக் கொண்டிருப்பார் விஷாலிடம். அந்தக் குரல் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு படங்களில் கேட்டுப் பழகிய குரல். சந்தானம் குறிப்பிட்ட டேஷ் இடத்தில் என்ன வரும் என்பதை நீங்களே கண்டுபிடிச்சிக்கங்க!
Tags:
Cinema
,
சினிமா