வைகைப்புயல் வடிவேலு தனது குடும்ப விஷயங்கள் அனைத்தையும் மிகவும் ரகசியமாகதான் வைத்திருப்பார். அவர் வீட்டு விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் நடைபெறும்.
அந்தவகையில் அவரது மகனை தொடர்ந்து தற்போது அவருடைய இரண்டாவது மகள் திருமணமும் மதுரையில் மிகவும் எளிமையான முறையில் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் திரையுலகைச் சேர்ந்த யாருக்கும் அழைப்பிதழ் வழங்கவில்லை. எனவே யாரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை.
கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் வருவதும், அது மீண்டும் சரியாவதும் சாதாரண விஷயம். சில நேரங்களில் அது வீட்டுக்கு வெளியிலும் பிரதிபலிக்கும். இந்தச் சண்டைகள் பொதுவான விழாக்கள், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிகழ்வதும் இயல்பு. ஆனால் அதுவே கொஞ்சம் பிரபலமான மக்கள் எனில் மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் வரை போகும்.
அப்படித்தான் நேற்று ஐஸ்வர்யா ராய், தான் நடித்த ’சர்ப்ஜித்’ படத்தின் சிவப்புக் கம்பள நிகழ்ச்சி, மற்றும் பிரிமீயர் ஷோவில் தன் கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட குடும்பத்தாருடன் கலந்துகொண்டார். இதில் ஐஸ்வர்யா ராய் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க வேண்டி அபிஷேக் பச்சனை அழைத்தார். முதலில் காதில் வாங்காமல் சென்றுவிட்ட அபிஷேக்கை மீண்டும் அழைத்து அருகில் நிற்க வைக்க கொஞ்சம் முகம் வாடிய நிலையிலேயே அபிஷேக் பச்சன் போஸ் கொடுத்தார்.
சிறிது நேரம் போஸ் கொடுத்தவர் சட்டென யாரும் எதிர்பாராதபடி, ’இவரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என ஐஸ்வர்யா ராயை தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட செய்வதறியாமல் ஐஸ்வர்யா ராய் நிற்கிறார். பின் என்ன சொல்வதென தெரியாமல் தர்மசங்கடமான நிலையில் உதட்டைப் பிதுக்கிச் சிரித்துவிட்டு மன்னிப்பு கேட்பது போல சைகை செய்துவிட்டுச் செல்கிறார்.
இதற்கு தம்பதியை ஆதரித்தும் விமர்சித்தும் பல எதிர்வினைகள். ஆனால் யோசித்தால் கணவன் – மனைவிக்குள் சின்ன மனஸ்தாபங்கள் வருவதும் பின்னர் அது சரியாவதும் சாதாரண ஒன்று. தேவையில்லாமல் இந்த விஷயத்தை விமர்சனங்கள் அளவுக்குக் கொண்டு செல்வது அவசியமில்லை என்றே தோன்றுகிறது. குட்டிக்குட்டிச் சண்டைகள் தானே கணவன் – மனைவி உறவுக்கு மிகப்பெரிய பாலமாகவும், பலமாகவும் அமையும்!
படப்பிடிப்பில் இருக்கும் போது ஒரு நாயகிக்கு கோபம் வந்தால் படப்பிடிப்பையே கேன்சல் செய்து விடுவார்கள். பேட்டி எடுக்கும் போது ஒரு நாயகிக்கு கோபம் வந்தால் பேட்டியைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். விழாக்கள் நடைபெறும் போது ஏதாவது கோபம் வந்தால் சொல்லாமல் கிளம்பி விடுவார்கள். இப்படித்தான் நாயகிகளின் கோபம் பற்றி காலம் காலமாகப் பார்த்து வருகிறோம்.
ஆனால்,தெறி நாயகி சமந்தாவுக்கு கோபம் வந்தால் இப்படி எதுவும் செய்ய மாட்டாராம். நேராக ஜிம்முக்குப் போய்விடுவாராம். தன்னுடைய மொத்த கோபத்தையும் ஜிம்மில்தான் இறக்கி வைப்பாராம். கடுமையான உடற்பயிற்சிகளை ஆவசேமாகச் செய்து தன்னுடைய கோபத்தைக் குறைத்துவிடுவாராம். வேர்வை சிந்த உடற் பயிற்சி செய்த பின் அந்தக் கோபம் தானாகவே போய்விடுமாம்.
ஒரு வேளை உடற்பயிற்சி செய்து உடலை வலிமையாக்கி, அதன் பின் ஆக்ஷனில் இறங்கி அந்தக் கோபத்தைக் காட்டுவாரோ ?....
நகை கடை திறப்பு விழாவுக்கு சமந்தா கவர்ச்சி உடை அணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
நடிகைகள் படங்களில் கவர்ச்சியாக தோன்றுவது சகஜம். ஆனால் பொது விழாக்களில் பெரும்பாலும் அதை தவிர்த்தனர். கால்கள் தெரிய ஆடை உடுத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். சிலர் சேலை உடுத்தி வந்தார்கள். நகை கடை மற்றும் ஜவுளி கடை திறப்பு விழாக்களில் இப்படித்தான் நடிகைகளை பார்க்க முடிந்தது.
ஆனால் சமந்தா முதல் தடவையாக இதை முறியடித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த நகை கடை திறப்பு விழாவில் வயிறு தெரியும்படி கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார். கடையில் திரண்டு இருந்த பலரது கண்களும் அவரது வயிற்று பகுதியை மொய்த்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.
வெளியில் சமந்தாவை காண பெரும் கூட்டம் இருந்தது. நல்லவேளையாக அவர்களிடம் சிக்கவில்லை. பாதுகாவலர்கள் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவிட்டனர்.
நடிகர் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர். தன் பட ப்ரோமோஷன் நிகழ்சிகளுக்கு கூட அவர் வரமாட்டார். இது வழக்கமாக நடப்பதுதான். இந்நிலையில் இதற்கான காரணம் என்னவென்பதை தனது நெருங்கிய நண்பர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால், நாம் வளரும் போது காதுகளை மூடிக்கொள்ள வேண்டும், வளர்ந்த பிறகு வாயை மூடிக்கொள்ள வேண்டும். இதுதான் அஜித்தின் பாலிசியாம். இதனால்தான் அவர் எந்தவொரு விழாக்களிலும் கலந்து கொள்வதில்லையாம்.